மூணு நாள் முடிவில் மாநாடு திரைப்படத்தின் வசூல் என்ன என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பதிவு செய்துள்ளார்.

3 Days Collection of Maanadu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி கடந்த 25ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி வெளியானது.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

மூணு நாள் முடிவில் இவ்வளவு வசூலா?? வெறித்தனமாக வசூல் வேட்டையாடும் மாநாடு - தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

படத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், இயக்கிய மகேந்திரன் என அனைவரது நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பதாக ரசிகர்களின் விமர்சனங்கள் கூறுகின்றன. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக இந்த படம் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திரைப்படம் இரண்டு நாள் முடிவில் 14 கோடி வசூல் செய்திருந்தது. இந்த நிலையில் மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் 22 கோடி வசூல் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

மூணு நாள் முடிவில் இவ்வளவு வசூலா?? வெறித்தனமாக வசூல் வேட்டையாடும் மாநாடு - தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

அதாவது மூன்றாவது நாளில் மட்டும் தமிழகத்தில் மாநாடு திரைப்படம் ரூபாய் 8 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.