3 Days Collection of Eeshwaran Movie

ஈஸ்வரன் திரைப்படம் மூன்று நாளில் சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

3 Days Collection of Eeshwaran Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படம் வெளியாகி 3 நாட்கள் ஆகி விட்ட நிலையில் மூன்று நாளில் சென்னையில் மட்டும் ரூபாய் 57 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அளவிலும் இந்த திரைப்படம் நல்ல வசூல் செய்து வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.