சீனாவில் நடைபெறும் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார்.இரண்டாவது சுற்றில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குருனிச்சுடன் நேற்று மோதிய குவித்தோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு செக். வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 1-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் சீனாவின் கியாங் வாங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
முன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா (பெலாரஸ்), ஆஷ்லி பார்தி (ஆஸி.), அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்), டாரியா காவ்ரிலோவா (ஆஸி.).
அனெட் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), மோனிகா புயிக் (போர்டோ ரிகோ) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.