அபிஷேக் ராஜாவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

2nd Wild Card Entry in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் முதல் வாரத்திலேயே உடல்நலக்குறைவால் நமீதா மாரிமுத்து விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)

இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் இசைவாணி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் நேற்று அபிஷேக் ராஜா வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டின் உள்ளே அனுப்பப்பட்டார்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review

இவரைத் தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் வீட்டுக்குள் இன்னொரு பிரபலம் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைய உள்ளார். அவர் ஏடிஎஸ் டான்ஸ் அகாடமி நடத்தி வரும் அமீர் தான் என சொல்லப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து தகவல் முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.