2nd match Indian
2nd match Indian

2nd match Indian – முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்கு 158 ரன்கள் எடுத்து இருந்தது, மிக குறைந்த ரன் ரேட் இது.

இதனை தொடர்ந்து களம் இறங்கியஇந்திய அணி 18.5 ஓவர்களில் 162/3 என்று அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்து நியுசிலாந்து அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 பெரிய சிக்சர்களை அடித்து 50 ரன்கள் எடுக்க ஷிகர் தவண் 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இருந்தனர்.

விஜய் சங்கர் 14 ரன்களில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் வெளியேற ரிஷப் பந்த் 28 பந்தில் 40 ரன் , தோனி 17 பந்தில் 20 ர‌ன், வெற்றிக்கு வழி வகுத்தனர்.

முதல் ஓவரில் சவுதியை கட் ஷாட் பவுண்டரியுடன் தொடங்கிய ரோஹித் சர்மா, அதிவேக பவுலர் லாக்கி பெர்கூசன் 142 கிமீ வேகத்தில் வீசிய முதல் பந்தை அதியற்புதமாக டீப் மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸ் அடித்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடினார் சர்மா.

தவாண் தொடக்கத்தில் சற்று திணறினார், முதல் பவுண்டரி அடிக்க தொடங்கியது தான் இவரும் தன் பங்கிற்கு அடித்து விளையாட தொடங்கிவிட்டார். சவுதியை 2 பவுண்டரிகள் அடித்தார்.

இன்னொரு புல்ஷாட் சரியான ஷாட். 6 ஓவர் பவர் ப்ளேயில் இந்திய அணி 50 ரன்கள் வந்தது.

சாண்ட்னர் தன் முதல் ஓவரை டைட்டாக வீசினாலும் இஷ் சோதி தன் முதல் ஓவரில் 11 ரன்களை வாரி வழங்கினார்.

இதில் ஒரு மோசமான லெக் திசை பந்தை ரோஹித் சர்மா குறைந்த தூர ஃபைன் லெக் பவுண்டரிக்கு சிக்சராகத் தூக்கினார், இந்த ஷாட் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரரானார் ரோஹித் சர்மா.

சாண்ட்னர் 2வது ஓவரில் ரோஹித்திடம் சிக்க மேலேறி வந்து மிக அழகாக நேராக சிக்ஸ் அடித்தார் இந்த ஓவரில் சாண்ட்னரும் 11 ரன்களைக் கொடுத்தார்.

பிறகு ஸ்கொயர்லெக்கில் தட்டி விட்டு 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, சோதியின் பந்தை டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஷாட் சரியாகச் சிக்காமல் சவுதி கேட்சுக்கு வெளியேறினார்.

31 பந்துகளில் 30 ரன்களுக்கு சரளமில்லாமல் ஆடிய தவண் பெர்கூசனின் ஆக்ரோஷமான பவுன்சரை புல் ஷாட் ஆடும் முயற்சி செய்தார், ஆனால் பந்தின் கோணம், வேகம் ஷிகர் தவனுக்கு டூ மச் ஆக ஆஃப் திசையில் கேட்ச் ஆனது.

ஒரு விதத்தில் அசிங்கமாக ஆட்டமிழந்தார் ஷிகர் தவண். ஆனால் ஸ்கோர் 88/2 என்று இருந்த போது சங்கர், பந்த் இணைந்தனர்.

இறுதியில் இந்திய அணி அபாரமாக ஒற்றுமையுடன் விளையாடி வெற்றி பெற்றது.

கலீல் அகமெட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற குருணால் பாண்டியா 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக குருனால் தேர்வு செய்யப்பட்டார்.