2Days Collection of Maanaadu in Tamilnadu

இரண்டு நாளில் தமிழகத்தில் மாநாடு திரைப்படம் எவ்வளவு வசூல் என அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

2Days Collection of Maanaadu in Tamilnadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இரு தினங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர் என பல்வேறு திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை ஆடி வருகிறது. ஐஎம்டிபி இணையதளத்தில் ஜெய்பீம் படத்திற்கு இணையாக ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்துள்ளது.

படம் எடுக்குறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? – கதறி அழுத சிம்பு நண்பர் Cool Suresh | MaanaaduReleaseIssue

இந்த நிலையில் தற்போது படம் வெளியான இரண்டு நாட்களில் தமிழகத்தில் மாநாடு திரைப்படம் மொத்தமாக 14 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.