28 Years of Thalapathism Celebration

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்னும் மூன்றே நாளில் மிகப் பெரிய கொண்டாட்டம் ஒன்று காத்துக் கொண்டுள்ளது.

28 Years of Thalapathism Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருமே திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தளபதி விஜய் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 28 வருடங்கள் இன்னும் மூன்றே நாளில் நிறைவடைய உள்ள நிலையில் 28YearsofThalapathism என்ற பெயரில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்த தகவல்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவதால் #28YearsofThalapathism என்ற ஹேஸ்டேக் டிரெண்ட்டிங்கில் இடம் பெற்றுள்ளது.