நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் 250 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் ஷாருக்கானுக்கு நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

ஜவான் திரைப்படத்தில் நடிக்கும் 250 பெண் ஸ்டாண்ட் கலைஞர்கள்!! - அதிர்ச்சியான தகவல் இதோ!.

ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு திரைக்கு வர தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.

ஜவான் திரைப்படத்தில் நடிக்கும் 250 பெண் ஸ்டாண்ட் கலைஞர்கள்!! - அதிர்ச்சியான தகவல் இதோ!.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் 200 முதல் 250 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்று இருப்பதாகவும் ஷாருக்கானுடன் அவர்கள் மோதும் காட்சி படமாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.