ராயன் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் ராயன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
மேலும் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்திப் கிஷன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். வசூலிலும் இந்த படம் தூள் கிளப்பி வந்தது.
அந்த வகையில் இந்த படம் வெளியாகி 25 நாட்களை எட்டியுள்ளது.இதனை #25DaysofRaayan என்ற ஹேஷ்டேக்குடன் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.