5 வருடமாக பேசப்பட்டு வந்த பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

24th Pulikesi Movie Update : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. மிகப்பெரிய காமெடி ஜாம்பவானான இவர் 23ஆம் புலிகேசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனையடுத்து 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் சிம்பு தேவன் இயக்க சங்கர் தயாரிக்க இருந்தார்.

முடிவுக்கு வந்த 5வருட பிரச்சனை.‌ பிரமாண்ட படத்தில் கம்பேக் கொடுக்கும் வடிவேலு

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகியிருந்த நிலையில் வடிவேலு படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் வடிவேலுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் : தமிழக அரசின் புதிய திட்டம் தொடக்கம்

இந்த நிலையில் தற்போது அந்த பிரச்சனையை பேசித் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

தன்னை திருமணம் செய்ய விரும்பிய ரசிகர் – ஷாக்கிங் பதில் சொன்ன Priya Bhavani Shankar! | HDWbogc