24 Movie Removed From Amazon Prime
24 Movie Removed From Amazon Prime

சத்தமில்லாமல் OTT-யிலிருந்து சூர்யாவின் மெகா ஹிட் படம் நீக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

24 Movie Removed From Amazon Prime : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகியிரந்த படங்களில் ஒன்று 24.

விக்ரம் குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி இருந்த இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இப்படம் வெற்றி அடைந்தது‌.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த 24 படம் கடந்த மாதம் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ சரியாக இல்லாத காரணத்தினால் அமேசான் நிறுவனம் இதை நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பதிவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.