2024 college students to study through Vishal's foundation
2024 college students to study through Vishal's foundation

நடிகர் விஷால் அவர்களின் அறக்கட்டளை மூலம் படிக்க வைக்கும் 2024ஆம் ஆண்டு கல்லூரியில் மாணவ, மாணவியர்கள்

நடிகர் விஷால் தனது அம்மா அவர்களின் பெயரில் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் பலவருடங்களாக ஏழை எளியோர்க்கு உதவி செய்வதுடன், வருடம் தோறும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மேற்க்கொண்டு படிக்க முடியாத மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளை கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கவைத்து வருகிறார். அதே போன்று இந்த வருடம் 2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான சேர்க்கையில் விவசாய குடும்பங்கள், முதல்நிலை பட்டதாரிகள் மற்றும் தாய் தந்தை இல்லாத வறுமை கோட்டிற் கீழ் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பதிவும் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்று அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பிற்கு உதவி செய்துள்ளார்.

நடிகர் விஷால் தனது அம்மா அவர்களின் பெயரில் நடந்துவரும் தேவி அறக்கட்டளை மூலம் பலவருடங்களாக நற்பணி திட்டங்களை செய்து வருகிறார்.

“அன்னை தெரசா” அவர்களின் பெயரில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவுற்ற முதியோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான உபகாரங்கள் போர்வைகள் மற்றும் உணவு வழங்குவதுடன், அதில் மிகவும் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட முதியோர்களை மீட்டு காவல் துறை அனுமதியுடன் முதியோர் இல்லம் மற்றும் மனநல மருத்துவமனைகளில் முறையாக சேர்த்து பராமரித்து பாதுகாத்து வருகிறோம்.

“தேவி சக்தி” என்ற திட்டத்தின் மூலம் வறுமையில் தனது குடும்பத்தை நடத்தும் குடும்ப தலைவி பெண்களை ஊக்கவிக்கும் வகையில் அவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் “தேவி சக்தி” திட்டத்தின் கீழ் தையல், கணினி போன்ற பயற்சி வகுப்புகள் அளித்தும் அதற்கான சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கி வருகிறோம்.

“கொரோனா” காலகட்டங்களில் இயற்கை பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி உதவிகளை வழங்கி கை கொடுத்துள்ளோம்.

“இந்திய நாட்டின் முதுகெலும்பு விவசாயம்”, அந்த விவசாயத்தை காக்கும் விதமாக “விவசாயிகளுக்கு கைகொடுப்போம்” திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாய குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்வதுடன்.
மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் கருவேல மரங்களை அழிப்பதுடன், பனை விதைகள் மரக்கன்றுகளை பல்வேறு மாவட்டங்களில் விதைத்து வருகிறோம்.

“உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்” என்பதின் பேரில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்ங்கள் நடத்தி அதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர்கள் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவி வழங்கி வருகிறோம்.

தேசியத் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நண்பர்கள், உறவினர்களின் பிறந்த நாள், மற்ற விழாக்களான பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய தினங்களில் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் உணவு, உடை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

வருடம் தோறும் மறைந்த “முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்” அவர்களின் பெயரில் வறுமைக்கு உட்பட்டு ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குவதுடன்,பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மேற்க்கொண்டு படிக்க முடியாத மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளை தத்தெடுத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கவைத்து வருகிறோம்.

அதே போன்று இந்த வருடம் 2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான சேர்க்கையில் விவசாய குடும்பங்கள், முதல்நிலை பட்டதாரிகள் மற்றும் தாய் தந்தை இல்லாத வறுமை கோட்டிற் கீழ் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பதிவும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது.

V ஹரிகிருஷ்ணன்
ஒருங்கிணைப்பாளர் – தேவி அறக்கட்டளை