2022 ஆம் ஆண்டில் வெளியாகி அதிக வசூல் செய்திருக்கும் படங்கள் குறித்த தகவல் வைரல்.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளியான பல உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அதிக வசூல் வேட்டையாடி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது. அது பற்றி பிரபல விநியோகஸ்தர் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

2022 ஆம் ஆண்டில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்கள் இதுதானாம்… பிரபல விநியோகஸ்தர் அளித்திருக்கும் தகவல் வைரல்!.

அதாவது, இந்த ஆண்டில் வெளியாகி அதிக வசூலை ஈட்டி இருக்கும் நான்கு திரைப்படங்கள் பற்றி பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பகிர்ந்திருக்கிறார். அதன்படி, “பொன்னியின் செல்வன்1” முதல் இடத்திலும் இதனைத் தொடர்ந்து விக்ரம், பீஸ்ட், வலிமை ஆகிய படங்கள் உள்ளன. மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சமீபத்தில் மாபெரும் வசூலை ஈட்டி வரும் லவ் டுடே திரைப்படம் எதிர்பாராத வசூலை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.