2020 World Cup
அடுத்த ஆண்டு நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணி நேரடியாகவே தகுதி பெற்று உள்ளது.

2020 World Cup : அடுத்த மாதம் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் அரபு நாட்டில் நடைபெற இருக்கிறது.

மொத்தம் 16 அணிகளே டி20 போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நிலையில் தரவரிசை அணிகள் தவிர 14 அணிகள் போட்டிக்கு தயாராய் உள்ளன.

இந்த 14 அணிகளும் இரு பிரிவாய் பிரிக்கப்பட்டு இரு பிரிவுக்கும் இடையே  போட்டிகள் நடத்தப்படும்.

இதில் தேர்வாகும் 6 அணிகள் டி20ல் பங்கேற்க தகுதி பெறும் என ஐசிசி தெரிவித்து இருந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் டாப் 10 இடங்களில் உள்ள அணிகள் இந்த தகுதி சுற்றில் விளையாட அவசியம் இல்லை.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கியமான 10 நாடுகள் இந்த தகுதி சுற்றில் விளையாடவில்லை.

ஜிம்பாப்பே கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்திருப்பதால் அந்த அணியும் இந்த தகுதி சுற்றில் இடம்பெறவில்லை.

மேலும் தகுதி சுற்றில் எப்படியாவது வென்று விட சில நாட்டு அணிகள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஐசிசி தீவிரமாக கண்காணித்து வருகிறது. எந்த அணியாவது சூதாட்டத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here