2000 Mini Clinic in Tamilnadu
2000 Mini Clinic in Tamilnadu

கொரானா தடுப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2000 Mini Clinic in Tamilnadu : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸால் 49 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி வருகிறது.

தமிழக அரசு எடுத்து தரமான நடவடிக்கை காரணமாக ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

மேலும் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஒவ்வொரு நாளும் பரிசோதனைகளை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதின் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்கை உருவாக்க உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரானா சிகிச்சையில் உலகத்துக்கே மாஸ் காட்டும் தமிழகம்..!

இந்த 2000 மினி கிளினிக்கில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர்களும் இடம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக உருவான படித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் வைரஸ் பரவல் நிச்சயம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் எடுத்துள்ள இந்த அதிரடியான திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது.