20 Years of GVMism

சினிமாத்துறையில் 20 வருடங்களை வெற்றிகரமாக முடிந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

20 Years of GVMism : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் தமிழில் மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் வாரணம் ஆயிரம் திரைப்படத்துக்காக தேசிய விருதையும் பெற்றார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

தற்போது இவர் தனது சினிமா துறையில் 20 வருடம் நிறைவடைந்துள்ளதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. மேலும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.