2 Point O Trailer Review

2 Point O Trailer Review: 2 பாயிண்ட் ஓ படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பலர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி ரசிகர்களை மட்டுமில்லாமல் இந்திய சினிமாவையே மெர்சலாக்கி வருகிறது.

அதீத தொழில்நுட்பத்தில் படம் முழுவாகி இருப்பது ட்ரைலரில் தெள்ள தெளிவாக தெரிகிறது. ட்ரைலரில் மக்களின் செல்போன்கள் அனைத்தும் பறந்து செல்கின்றன.

அதன் பின்னர் ஆக்ரோஷமாக பறவை ஒன்று மக்களை தாக்க வர அனைவரும் பதறியடித்து ஓடுகின்றனர்.

அக்ஷய்குமார் செல் போன் வைத்திருப்பவர்கள் அனைவருமே கொலை காரர்கள் தான் என கூறுகிறார்.

செல் போன்களால் முக்கிய பறவை இனங்கள் அடையாளம் தெரியாமல் அழித்து போனதே இதற்கு காரணம்.

இதனால் அந்த பறவைகளின் சக்தி ஒன்றிணைந்து தங்களை அழித்த மக்களை பழி வாங்க துடிக்கிறது.

அதன் பின்னர் சுஐப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐ அம் சிட்டி 2.ஓ ரிலோடுடட் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பன்ச் டைலாக் மாஸாக இடம் பெறுகிறது.

இருப்பினும் பன்ச்சில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்ஷன் வேறு விதமாக இருந்தால் இன்னும் ரசிக்கும் படியாக இருந்திருக்கும்.

எமி ஜாக்சன், ரஜினிகாந்தின் காதல் காட்சி.. ரஜினிகாந்தின் வாவ் சொல்லும் விதம் ஆகியவை ரசிக்க வைக்கிறது. ரஜினிகாந்த் அக்சய் குமார் இடையேயான சண்டை காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுகின்றன.

மொத்தத்தில் இந்த 2.ஓ ரசிகர்களை மெர்சலாக்கி இந்திய சினிமாவை அடுத்த கட்டடத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இருக்கும் என முழு மனதார நம்பலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.