2 Point O

2 Point O  : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்து வரும் 2 பாயிண்ட் ஓ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே வரும் நவம்பர் 3-ம் தேதி ட்ரைலர் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்த இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் நவம்பர் 29-ல் உலகம் முழுவதும் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.