2 Point O Running Time

2 Point O Running Time : ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள 2 பாயிண்ட் ஓ படத்தின் ரன்னிங் டைம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

லைகா நிறுவனம் ரூ 650 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் நவம்பர் 29-ம் தேதி முதல் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்திற்கு சென்சார் அமைப்பு U/A சான்றிதழ் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் விவரமும் வெளியாகியுள்ளது.

2 பாயிண்ட் ஓ படத்தின் ஓடு நேரம் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகள் என தெரிய வந்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விசியம் என்னவென்றாகி இதுவரை வெளியாகியுள்ள ஷங்கர் படத்திலேயே 2 பாயிண்ட் ஓ படத்தின் ரன்னிங் டைம் தான் மிக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.