2 point O Fans Reaction

2 Point O Fans Reaction : 2 பாயிண்ட் ஓ படம் வெற்றியடைய ரஜினி ரசிகர்கள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் ரசிகர்கள் செய்துள்ள வேலை இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் கோவிலில் மொட்டை அடித்து மண் சோறு சாப்பிட்டு அங்கப்பிரதசனம் செய்து உள்ளனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகின்றன. உலகம் முழுவதும் இப்படம் 10,000 தியேட்டர்களுக்கு அதிகமாக வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முதல் முறையாக 3D-யில் உருவாகியுள்ள படம் 2 பாயிண்ட் ஓ என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Fans

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here