2.O & STR Fans

2.O & STR Fans : சூப்பர் ஸ்டாரின் 2.O படம் பார்க்க சென்று சிம்பு ரசிகர்கள் பலர் ஏமார்ந்து விட்டதாக ட்விட்டரில் நொந்து கொள்கின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த படம் 2 பாயிண்ட் ஓ.

உலகம் முழுவதும் இப்படம் இன்று முதல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் இடைவெளியில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற டீஸர் வெளியாகும் எனவும் அறிவித்து இருந்தனர்.

இதனால் சிம்பு ரசிகர்களும் டீசரை பிக் ஸ்க்ரீனில் பார்க்கவே 2 பாயிண்ட் ஓ படத்திற்கு சென்றுள்ளனர். டீசரும் மாஸாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து தியேட்டர்களிலும் டீஸர் வெளியாவில்லை என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தியேட்டரில் மட்டும் டீசரை ரிலீஸ் செய்து விட்டார்கள். யூ ட்யூபில் இன்னும் ரிலீஸ் செய்யவில்லை எனவும் வருத்தப்படுகின்றனர்.

ரசிகர்கள் பலரும் குஷ்பூ, சுந்தர் சி, லைகா நிறுவனம் என பலருக்கும் டீசரை ரிலீஸ் செய்ய கூறி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.