2 point 0

2 Point 0 Sensor : 2 பாயிண்ட் ஓ படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து அது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுமார் ரூ 650 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள படம் 2 பாயிண்ட் 0.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர், ட்ரைலர், பாடல்கள் என இதுவரை வெளியாகியுள்ள அனைத்தும் ரசிகர்களை மிரள வைத்து உள்ளது.

மேலும் படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நவம்பர் 29-ம் தேதி முதல் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் பணிகளும் முடிவடைந்துள்ளது. தணிக்கை குழு படத்தை பாராட்டியது மட்டுமில்லாமல் U/A சான்றிதழும் அளித்துள்ளது.

எமி ஜாக்சன் மற்றும் பலர் இது குறித்த தகவல்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இப்படம் 2D, 3D என இரண்டு விதமாக உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.