
2 Point O Review : 2.O படத்தை படு மொக்கை படம் என மோசமாக விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார் பிரபலம் ஒருவர்.
இவரது இந்த சர்ச்சை பதிவு ரசிகர்களை கடும் அப்செட்டாக்கி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்த படம் 2.O.
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த படம் செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி பேசுகிறது.
இதுவரை படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டுகளை மட்டுமே கூறி வரும் நிலையில் பிரபல எழுத்தாளாளரான சாரு நிவேதிதா மோசமான படம் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவரது பதிவில் ஷங்கரையும் படத்தையும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். ஷங்கரின் சமூகம் சார்ந்த எண்ணத்தையும் விமர்சித்துள்ளார்.
இவரது இந்த விமர்சனம் ரசிகர்களை கடும் அப்செட்டாக்கியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் சாறு நிவேதிதா அவர்களை தாக்கி பேசி வருகின்றனர்.
2.O குறித்து அவர் பதிவிட்டிருந்த சர்ச்சை பதிவு இதோ உங்களுக்காக