2.O Collection

2.O Collection : 2.O படத்தின் வசூல் என்ன? படம் தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா? என லைகா நிறுவனமே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த படம் 2.O

தமிழ் சினிமாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்த படம் என்றால் அது மிகையாகாது. காரணம் இப்படம் அதி நவீன தொழில்நுடத்தில் 3D-யில் உருவாகி இருந்தது தான்.

இருப்பினும் இப்படம் ரூ 200 கோடி வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான் என தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது இது குறித்து லைகா நிறுவனம் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

அது என்னவென்றால் இப்படம் இதுவரை ரூ 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். இது வெறும் படம் ரிலீசுக்கு பின்னர் கிடைத்த வசூல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பட ரிலீசுக்கு முன்னரே இப்படம் வியாபார ரீதியாக ரூ 350 கோடி வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here