Nadodigal-2
சமூகத்தில் மாற்றத்தை நோக்கி எடுத்து வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சமூக சிந்தனையுடன் நாடோடிகள் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக ஒவ்வொரு படத்திலும் புதுப்புது புரட்சிகளை நிகழ்த்தி வருபவர் சமுத்திரக்கனி. இவரது இயக்கத்தில் வெளியாகி நட்பின் பெருமையை பேசிய திரைப்படம் நாடோடிகள்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி என பலர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தில் நட்பை பற்றி பேசிய இப்படம் இரண்டாம் பாகத்தில் சமூகத்தின் நலனை பற்றி பேசியுள்ளது. சமூகத்தில் மாற்றத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போம் என்பதை இப்படம் உணர்த்தும் வகையில் உருவாகியுள்ளது.

நாடோடிகள் வெற்றி கண்டதை போல நாடோடிகள் 2 திரைப்படமும் வெற்றி பெறும், சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும் என நம்பலாம்.

நாடோடிகள் 2 இன்னும் இரண்டே தினங்களில் ( ஜனவரி 31 ) உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.