வெந்து தணிந்தது காடு படத்துக்கு போட்டியாக வெளியான சினம் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் சினம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 25 லட்சம் வசூல் செய்துள்ளது.

இரண்டாவது நாளில் படத்தின் வசூல் முதல் நாளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து 30 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 55 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.