இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி அண்ணாத்த திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

2 Days Collection of Annaththe : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி கடந்த 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் அண்ணாத்த.

ரயில் பயணிகளுக்கு, மீண்டும் சலுகைகள் வழங்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இரண்டே நாளில் 100 கோடி வசூலை தாண்டிய அண்ணாத்த திரைப்படம்.‌. ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு என பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

சினிமாவில் நான் நடிக்க தேவையில்லை – ரகசியம் சொன்ன Kamal Haasan

முதல் நாளில் இந்தத் திரைப்படம் ரூபாய் 70.19 கோடி வசூல் செய்திருந்தது. இரண்டாவது நாளில் ரூபாய் 42.63 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டு நாளில் இந்தத் திரைப்படம் ரூபாய் 112.82 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.