ஜிவி பிரகாஷின் அடியே திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் அடியே.

கௌரி கிஷன் நாயகியாக நடித்து வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த திரைப்படம் சுமார் எட்டு கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இந்த நிலையில் முதல் நாளில் மட்டும் அடியே திரைப்படம் ரூபாய் 48 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாளில் 60 லட்சம் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. இன்றும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.