2.0 not Releasing in 56000 Screens : Rajinikanth | Akshay Kumar | Amy Jakson | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

2.0 not Releasing in 56000 Screens :

தமிழர்கள் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும், இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிலும் பரப்பியவர் ஷங்கர்.

இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 2.0.

உலக அளவில் வசூலில் பல சாதனைகளை நிகழ்ச்சியை படம் கூடிய விரைவில் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜூலை 12ம் தேதி இப்படம் சீனாவில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி 167 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதோ – ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

சீனாவில் 56 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் 3டியில் வெளி வருவதாக ஒரு செய்தி வெளியாகி வேகமாய் பரவியது சீனாவில் மொத்தம் இருப்பதே 60 ஆயிரம் திரையரங்குகள் தான்.

அப்படியிருக்கும்போது 56 ஆயிரம் திரையரங்குகளில் எப்படி 2.0 திரைப்படம் வெளியாகும் என்ற கேள்வியும் எழுந்தது உண்மை என்னவென்றால் 2.0 திரைப்படம் சீனாவில் 56 ஆயிரம் காட்சிகளில் திரையிடப்படுகிறது.

அதைத்தான் எல்லோரும் 56 ஆயிரம் திரையரங்குகள் என மாற்றி விளம்பரம் செய்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.