2nd T20 Match
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழப்பில் 153 ரன்கள் எடுத்தது.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோஹித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் ஓவரிலேயே தவான் 2 பவுண்டரிகள் அடித்து அதிரடி தொடக்கம் தந்தார். பவர் பிளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி எந்த விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினார்.

பிறகு,15.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here