1st Test India won 31 runs
1st Test India won 31 runs

1st Test India won 31 runs – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியா ஆஸ், எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் 6-ஆம் தேதி தொடங்கியது.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. புஜரா சிறப்பாக விளையாடி 123 ரன் சேர்த்தார்.

மேலும், ஆஸ், அணி முதல் இன்னிங்ஸில் 225-க்கு ஆல் அவுடானது.

அடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 307 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு 323 ரன்கள் இலக்காக குறிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்து இருந்தது.

இதனை தொடர்ந்து நடந்த 5-ஆம் நாள் ஆட்டம், இரு அணிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது.

ஒவ்வொரு ரனும், ஒவ்வொரு விக்கெட்டும் மிகவும் முக்கியமாக இருந்தது. இருந்தும், இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

சிறப்பாக பந்து வீசிய போதும் ஆஸ்., அணி வீரர்கள் விரைவில் விட்டு கொடுக்கவில்லை. இஷாந்த் சர்மா, பும்ரா மற்றும் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்ஸில் 119.5-வது ஓவரில் 291 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால், சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியா மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்திய அணியின் சார்பில் அஸ்வின், ஷமி, பும்பர ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

மற்றும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த புஜரா ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.