18+ Movies in Tamil Cinema
18+ Movies in Tamil Cinema

தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய 18+ திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

18+ Movies in Tamil Cinema : ஒவ்வொரு வருடமும் சினிமாவில் பல திரைப் படங்கள் ரிலீசாகின்றன அதிலும் தமிழில் குறைந்தது 300 படங்கள் ரிலீசாகும்.

தற்போதெல்லாம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் டபுள் மீனிங் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதும் சகஜமாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற படங்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி மெஹா ஹிட்டான 20 தமிழ் திரைப்படங்கள் – இதுல உங்க ஃபேவரிட் மூவி இருக்கா? லிஸ்ட் இதோ!

இப்படியான வகையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 18+ திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

1. திரிஷா இல்லனா நயன்தாரா

இந்தப் படத்தில் நடிகர் ஜீவி பிரகாஷ் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

2. சிந்து சமவெளி

ஹரிஷ் கல்யாண் மற்றும் அமலாபால் சினிமாவில் அறிமுகமான படம் இதுதான். மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்படும் உறவு குறித்து பெரும் சர்ச்சை ஏற்படுத்திய படமாக இது இருந்தது.

3. மிருகம்

சிந்து சமவெளி படத்தை இயக்கிய சாமி என்பவர் தான் இந்த படத்தையும் இயக்கினார். இந்தப் படமும் பெரும் சர்ச்சைக்குரிய படமாக அமைந்தது.

4. ஹர ஹர மகாதேவகி 

இந்த படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்க கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்திருந்தனர். இது கொஞ்சம் டபுள் மீனிங் டயலாக்குகளை அதிகமாக கொண்ட படமாக இருந்தது.

5. இருட்டு அறையில் முரட்டு குத்து

இந்தப் படத்தையும் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவர் தான் இயக்கினார். முதல் படத்தை விட இப்படம் மிகவும் மோசமான அளவில் டபுள் மீனிங்குகளுடன் உருவாக்கியிருந்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது ஆனால் இதில் இந்த படத்தின்
இயக்குனரே நடித்துள்ளார்.

6. 90 ML

ஒரு பெண் இயக்குனரின் இயக்கத்தில் இப்படம் வெளியாகி இருந்தது. பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை படம் பேசியது. ஓவியா உள்ளிட்டோர் நடிக்க சிம்பு இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

7. ஆடை

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் இப்படம் உருவாகியிருந்தது. அமலாபால் படம் முழுவதும் ஆடை இல்லாமல் நடித்திருந்தாலும் இப்படத்தில் கொஞ்சமும் ஆபாசம் இல்லை. பிராங்க் நிகழ்ச்சிகளால் ஏற்படும் பிரச்சனைகளை இப்படம் அழகாக அலசியது.

இப்படத்தின் இயக்குனரான ரத்னகுமார் தற்போது மாஸ்டர் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்கள் மட்டும் அல்லாமல் இனி வரும் காலங்களில் பல 18+ படங்கள் இன்னும் அதிகமாக ரிலீசாக உள்ளன.