YouTube video

EPS About Nellai and Madurai Scheme : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஆகஸ்ட் 6-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் இதுவரை 1,63,492 பேருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இதுவரை மதுரை மாநகரில் நான்காயிரம் காய்ச்சல் முகாம் புறநகர்களில் 8,000 காய்ச்சல் முகாம் என மொத்தம் பனிரெண்டாயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மதுரை மாவட்டத்தில் 84 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அரசு பெரிய மருத்துவமனையில் ரூபாய் 131 கோடியே 69 லட்சம் செலவில் நான்கு அடுக்கு கட்டடம் கட்டப்பட இருப்பதாகவும் ரூ.173 கோடியே 43 லட்சம் செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி மொத்தம் ரூ.305 கோடி செலவில் அரசு பெரிய மருத்துவமனையை மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை லோயர் கேம்பில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கொண்டுவர ரூபாய் 1200 கோடியில் திட்டம் செயல்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை மாநகரில் செயல்படுத்தப்பட்டு உள்ள மற்ற திட்டங்கள் குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

மதுரையைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானா நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் ரூபாய் 196.75 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ரூபாய் 78.77 கோடி மதிப்பில் தென்காசி மாவட்டத்திற்கு சிறப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த இவர் தமிழ்நாடு முழுவதும் ரூபாய் ஆயிரம் கோடி செலவில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் தாமிரபரணி, நம்பியாறு மற்றும் கருமேனியாறு ஆகியவற்றை இணைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் முட்டுக்கட்டையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. விரைவில் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு வரும் 2021ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.