15 contest to enter Big boss 3 house
15 contest to enter Big boss 3 house

15 contest to enter Big boss 3 house – பிக் பாஸ் மூன்றாவது சீசனில் மொத்தம் 15 பேர் பங்கேற்பதாக விஜய் டிவி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு,

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது.

முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினியும் இரண்டாவதாக ஜாங்கிரி மதுமிதாவும் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் மூன்றாவது சீசனில் மொத்தம் 15 பேர் பங்கேற்பதாக விஜய் டிவி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.