உலகம் முழுவதும் டான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.
11 Days Collection of Don Movie : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் டான். சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் 11 நாள் முடிவில் உலகம் முழுவதும் 98 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் திரைப்படமாக டான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.