YouTube video

108 New Ambulance Service Launched in Tamilnadu : கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அழைத்துச் செல்வதற்காக, அவசர ஊர்தி பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் 1,005 அவசரக்கால ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு, உடனடி மருத்துவ சேவை புரிய வேண்டும் என்பதற்காகவும், மலையோர மற்றும் கிராமப்புற மக்களுக்கும் அதிவிரைவு மருத்துவ சேவை கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும், மக்கள் உயிர்களை காக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை ஆற்றும் வகையில் புதியதாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை துவக்கி வைத்துள்ளார்.

• இந்த ஊர்திகளில் செயற்கை சுவாச இயந்திரம், ஆக்சிஜன் அளவீட்டுக் கருவி, மின் அதிர்வு சிகிச்சை இயந்திரம் போன்ற உயர்தரக் கருவிகள் மற்றும் 60 மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

• அனைத்து அவசரகால ஊர்திகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

• இதனை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்த பின், தற்போது பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

• அரசு சார்பில் 20.65 கோடி ரூபாய் மதிப்பில் 90 வாகனங்களும், தனியார் நிறுவனம் சார்பில் 1.26 கோடி மதிப்பில் 18 ஊர்திகளும், 3.09 கோடி மதிப்பில் 10 ரத்ததான ஊர்திகளும் பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில், பல பகுதிகளுக்கு இந்த ஆம்புலன்ஸ்களை அனுப்ப முதல்வர் முடிவு செய்துள்ளார்.

முதல்வரின் தொலைநோக்கு பார்வையால், கிராமப்புற, ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் ஆகியோருக்கு, நிறைவான, உடனடியான மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை நேரில் பாராட்டிய தமிழக முதல்வர்!

இதனால், கிராமப்புற மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ உதவி கிடைக்கப்பெறும். தமிழக முதல்வர், மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய கொரோனா இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் அயராது உழைத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், மக்களின் துயர் நிலை அறிந்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் துவக்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவையானது, மக்களிடையே பெறும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய 108 ஆம்புலன்ஸ்கள் மூலம், மக்கள் கூப்பிட்ட குரலுக்கு, மருத்துவ முதலுதவி சேவை ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் கூட, மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு பேணிகாக்கும் வகையில் தமிழக அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டுவருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.