100% SSLC Result in Tamilnadu : தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வு ரத்தான நிலையில் காலாண்டு அரையாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சி முடிவு வெளியிடப்பட்டது.

இதில் 100 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தற்கால மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 4,68,070 மாணவிகளும் 4,71,759மாணவர்களும் அடங்குவார்கள். இவர்கள் அனைவருமே தேர்ச்சி அடைந்து 100% தேர்ச்சி பெற்றனர்.

மூன்றாவது முறையாக பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னேற்றம்..!

நிகழாண்டு மறு கூடுதல் கிடையாது என்பதால் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருப்பின் மாணவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை தாங்கள் பயின்ற பள்ளி யின் மூலமாக குறைதீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் அரசு தேர்வுத்துறை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் கொரோனா காலகட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அதற்கு பதில் மாணவ-மாணவிகளின் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை கணக்கீடு செய்த தமிழக அரசின் முடிவிற்கும், தற்போது 100 சதவீத தேர்ச்சியும் அளிப்பதற்காக பலர் தரப்பிலிருந்து பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.