வலிமை படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது இவர் தான் வில்லனோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தில் வில்லனாக நடிக்க போவது யார் என்ற கேள்வி இன்று வரை பதில் கிடைக்காத புதிராகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பா இணைந்துள்ளார்.
இவர் வில்லன் வேடத்தில் தான் நடிக்கிறார் என்பதெல்லாம் உறுதியாகவில்லை, இருந்தாலும் ஒரு வேளை இவர் தான் வில்லனோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.