சுகுமார், புவனா சந்திரமௌலி தயாரிப்பில் எம்.எம் சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், ஷாலினி பாண்டே, தலைவாசல் விஜய், ரேகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 100% காதல்.
100% Kadhal Movie Review :
படத்தை பற்றிய அலசல் :
கதைக்களம் :
ஜி.வி பிரகாஷ் திறமையான கல்லூரி மாணவர், பள்ளி பருவத்தில் இருந்தே No 1 ரேங்க் எடுத்து வருபவர். அப்படியான நிலையில் இவர் அத்தை பெண்ணான ஷாலினி ஜி.வி பிரகாஷின் கல்லூரியிலேயே சேர்கிறார்.
மாமா ஜி.வி பிரகாஷிடம் பாடம் கற்று கொண்டு அவரையே பீட் செய்து முதல் ரேங்க் எடுக்கிறார். அடுத்த முறை இவர்கள் இருவருமே இல்லாமல் வேறொருவர் முதல் ரேங்க் எடுக்கிறார்.
இதனால் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒன்னு நீ பர்ஸ்ட் வரணும் இல்ல நான் பர்ஸ்ட் வரணும் என திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்குகின்றனர்.
ஜி.வி பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டேக்கும் இடையே காதல் இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோவால் பிரிந்து விடுகிறாரகள்.
ஷாலினி பாண்டேக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது, அதே போல் ஜி.வி-க்கும் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. அப்படியிருந்தும் இறுதியில் இவர்கள் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது தான் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல் :
நடிப்பு :
ஜி.வி பிரகாஷ் வழக்கம் போல அவரது பாணியில் கலக்கியுள்ளார். ஷாலினி பாண்டே அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
தொழில்நுட்பம் :
இசை :
இப்படத்திற்கு ஜி.வி ப்ரகாஷே இசை அமைத்துள்ளார். அதையும் சரியாக செய்துள்ளார்.
ஒளிப்பதிவு :
கணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவு சுமார் ரகம் தான்.
எடிட்டிங் :
மு. காசி விஸ்வநாதன் என்பவர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தை நேரத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
இயக்கம் :
சுகுமார் கதை எழுத எம்.எம் ராஜமௌலி இயக்கியுள்ளார். வித்தியாசமான கதையை தேர்வு செய்து அதனை வித்தியாசமான பாணியில் கொண்டு சென்றுள்ளார்.
தம்ப்ஸ் அப் :
1. ஜி.வி பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பு
2. இசை
தம்ப்ஸ் டவுன் :
1. பைக், காரில் செல்லும் காட்சிகளை கிரீன் மேட்டில் படமாக்கியது.
2. படத்தின் ரன்னிங் டைம்