100 Crore BOX OFFICE – Top 29 Movies In Tamil Cinema

YouTube video

Mundhanai Mudichu 2 Heroine Update : தமிழ் சினிமாவில் இயக்குநர் கே பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முந்தானை முடிச்சு. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் 1983 ஆம் ஆண்டு வெளியானது.

37 வருடங்களுக்கு பிறகு இந்த படம் தமிழில் மீண்டும் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்க உள்ளார்.

அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவைகளை இயக்குனர் பாக்யராஜ் தான் எழுத உள்ளார்.

ஜே எஸ் பி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத திரைப்படமான முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் இணைவது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.