தளபதி விஜய் ரசிகர்கள் வெறித்தனம் வெளியாகி ஒரு வருடம் ஆனதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

1 Years of Verithanam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் தற்போது மாஸ்டர் படத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பிகில் படத்தில் இடம் பெற்றிருந்த வெறித்தனம் பாடல் வெளியாகி ஒரு வருடம் ஆன கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் இறங்கியுள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அட்லி தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.