Suriya
சூரியாவின் அடுத்த பட இயக்குனர் யார் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவரது இயக்கத்தில் சூர்யா காக்க காக்க, வாரணம் ஆயிரம் என இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களும் மெகா ஹிட்.. அதன் பின்னர் இந்த கூட்டணி துருவ நட்சத்திரம் படத்திற்காக இணைய இருந்தது. ஆனால் இறுதியில் இப்படம் விக்ரம் கைக்கு மாறியது.

மேலும் கடும் நெருக்கடியில் இருந்து வந்த கவுதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் இந்த மாதம் ரிலீசாக உள்ளது. இதனை ஐசரி கணேஷ் ரிலீஸ் செய்கிறார்.

ஐசரி கணேஷின் மகன் வருணை வைத்து ஜோஸ்வா என்ற படத்தை இயக்கி வருகிறார். கவுதம் மேனன்.

இந்த படத்தை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் மேலும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

இந்த படத்தில் ஹீரோவாக சூர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது மட்டும் உருவாகி விட்டால் நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.