Thalapathy 64
தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லியாக பிரபல நடிகை நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64. மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார்.

விஜயின் உறவினரான பிரிட்டோ இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் மாளவிகா மோகன், ரம்யா சுப்பிரமணியன், 96 புகழ் கௌரி கிஷன், ஆண்ட்ரியா என பல நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி ஆண்ட்ரியா விஜயை எதிர்க்கும் கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பெரும்பாலும் ஆண்ட்ரியா வில்லியாக நடிக்கவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.