Thala Ajith Valimai Update
தல அஜித் நடிக்க உள்ள வலிமை படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் ஆனால் நாயகியாக இல்லை எனவும் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளன. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பையே உருவாக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என பேசப்பட்டு வந்தது.

மேலும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து போனி கபூரை சந்தித்து இருந்ததால் இது உண்மை தான் எனவும் பலர் பேச தொடங்கினர்.

ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி வலிமை படத்தில் நயன்தாரா கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் ஆனால் அஜித்துக்கு ஜோடியாக இல்லை எனவும் கூறப்படுகிறது.

அதாவது அஜித்தின் போலீஸ் டீமில் ஒருவராக நயன்தாரா நடிக்கிறாராம். அஜித், நயன்தாரா என இருவருக்குமே இப்படத்தில் ஜோடி இல்லை என கூறப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன என்பதை படக்குழு அறிவிக்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.