Losliya
தமிழில் லாஸ்லியா ஹீரோயினியாக நடிக்க இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், அதற்கு காரணம் அவரது தோழியின் சூசகமான பதிவு தான்.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இவர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார், தற்போது அவர்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவரை வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என்பது தான்.

இந்நிலையில் அதற்கேற்றார் போலவே அவரது தோழி ஒருவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்றை பதிவிட்டு முட்டை ஒன்று உடைந்து நட்சத்திரமாக ஜொலிக்க போவது போல சூசகமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் லாஸ்லியா நாயகியாக நடிக்க உள்ளார். அதை தான் அவர் தோழி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என கொண்டாடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

???? ????⭐

A post shared by TK (@tharshi_tk) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.