Valimai
படு மிரட்டலான லுக்கில் தல அஜித்தின் வலிமை படத்தின் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் இறுதியாக ரிலீசான நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் புத்தம் புதிய ஸ்க்ரிப்டில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் டைட்டில் வெளியானதோடு சரி வேறு எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது வலிமை படம் பற்றிய ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது என்னை அறிந்தால் படத்தின் லுக்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தாலும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.