Bigil
பிகில் நஷ்டமாக வேண்டிய படம் தான், ஆனால் முதல் 4 நாள் வசூலால் தான் நஷ்டத்தில் இருந்து தப்பி விட்டது என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அட்லீ இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிகில்.

ஆனால் இப்படம் வசூல் அதிகமாக பெற்றிருந்தாலும் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்கவில்லை என்ற பேச்சு இருந்து கொண்டு தான் வருகிறது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் பிகில் நஷ்டமாக வேண்டிய படம் தான். 5-வது நாளே படுத்து விட்டது.

முதல் நான்கு நாள் வசூல் என்பதால் நஷ்டத்தில் இருந்து தப்பித்து விட்டது. இதற்கெல்லாம் காரணம் படத்தின் பட்ஜெட் தான் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.