பத்திரிக்கையாளர் கேள்விக்கு தரமாக பதிலளித்த முதல்வர் பழனிசாமி.!! | AIADMK | EPS | NEET | Tamil Nadu

CM EPS Press Meet : மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் இந்த பிறகு தமிழகத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு வெறும் கனவாகவே சென்று கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 6 அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தான் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

இதனால் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயிலும் வகையில் 7.5% சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து அதனை நிறைவேற்றியும் உள்ளார் முதல்வர் பழனிசாமி.

Tamilnadu Rain Alert

இதனால் கிட்டத்தட்ட அரசு பள்ளியில் பயிலும் 311 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் பயிலலாம்.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மத்திய அரசு அவர்களின் நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தமிழகம் நீட் வேண்டாம் என நீட் வேண்டாம் எனக் கூறி வரும் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

ஆனால் நீங்க 7.5% சதவீத இட ஒதுக்கீட்டை பெருமையாக பேசி வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் பழனிசாமி முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான். அப்போது நீங்கள் வாய் திறக்கவில்லை.

7.5% சதவீத இட ஒதுக்கீடு பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?? ஒரு நிருபராக இருந்துட்டு தப்பா பேசாதீங்க. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்றவன். ஏழை மாணவர்களின் வலி என்ன என்பது எனக்கு தெரியும். இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததில் எனக்கு பெருமைதான் என பேசினார்.

மேலும் தயவுசெய்து ஏழை மாணவர்களுக்கு சப்போர்ட் செய்யுங்க. இப்படி எல்லாம் தேவை இல்லாத கேள்விகளை கேட்காதீர்கள் என கேட்டுக்கொண்டார்.