nayan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்தராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். இப்படத்திற்கு அனிருத் இசையத்திருந்த பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட் ஆனது.

இப்படத்தில் நடிக்கும் போதுதான் நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இப்படம் வெளியாகி இன்றோடு சரியாக 4 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று காலை முதலே 4yearsOfNaanumRowdyDhaan என்கிற ஹேஷ்டேக் இன்று காலை முதலே டிவிட்டரில் பலராலும் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நயன்தாரா ‘நானும் ரவுடிதான் வெளியாகி இன்றோடு 4 வருடங்கள் ஆயிற்று. மாபெரும் வெற்றி.. சூப்பார் டீம்.. சிறந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்’ என பதிவிட்டுள்ளார்.