Thalapathy Vijay 65
தளபதி 65 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கலாம் என நேற்று தகவல்கள் வைரலாகி இருந்த நிலையில் தற்போது அதற்கான விளக்கம் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் நேற்று தகவல் வைரலானது.

ஆனால், இது குறித்து விசாரித்ததில் அது முற்றிலும் பொய்யான ஒன்று என்பது தெரிய வந்துள்ளது. மகிழ் திருமேனி 4 மாதங்களுக்கு முன்பு விஜயிடம் கதை கூறியுள்ளார். அதுவும் தளபதி 64 படத்திற்காக தானாம்.

அதுமட்டுமில்லாமல் மகிழ் திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்க தீவிரம் காட்டி வருவதால் அவர் விஜயுடன் இணைய வாய்ப்பில்லை என்று தான் கூறுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.